சென்னை :சேலம்அருகேஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனையை எதிர்த்து தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் இன்று(பிப்.03) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, யுவராஜ் உள்ளிட்டோர் தரப்பில், வழக்கில் கைப்பற்றப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவு உள்ளிட்ட மின்னணு ஆதாரங்களை சேகரித்ததில் உள்ள குறைகளை, தவறுகளை சுட்டிக்காட்டி, தனக்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லை என வாதிட்டனர். மேலும், மின்னணு ஆதாரங்கள் திரிக்கப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.
இந்த வாதங்களுக்கு பதிலளித்து அரசு தரப்பில், மின்னணு ஆதாரங்களை திரிக்க வாய்ப்பில்லை என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த தடயவியல் துறை நிபுணர்களை அழைத்து நீதிபதிகள் விளக்கங்களை கேட்டு தெரிந்தனர்.