சென்னை:கோவைஉக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த அக்.23ஆம் தேதி கார் வெடித்து சிதறியதில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக இதுவரை 11 பேரை கைது செய்த என்ஐஏ அலுவலர்கள், அவர்களை பூந்தமல்லியில் உள்ள என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
கோவை கார் குண்டு வெடிப்பு - 6 பேருக்கு 10 நாட்கள் போலீஸ் காவல்
கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட 11 பேரில் 6 பேரை 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இதில் ஏற்கனவே அசார், பெரோஸ், உமர், பிரோஸ் மற்றும் அஃப்சர் ஆகிய 5 பேரை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் முகமது தல்கா, முகமது தவ்பிக், உமர் பாரூக், பெரோஸ் கான்ஷேக், இதயதுல்லா மற்றும் சனோபர் அலி ஆகிய 6 பேரை 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ நீதிமன்ற நீதிபதி இளவழகன் அனுமதி அளித்துள்ளார். வருகிற 17ஆம் தேதி மீண்டும் 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:Karur: சினிமா பாணியில் கள்ள நோட்டு கடத்திய கும்பல் கைது