தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரசிகர்கள்தான் எனது எனர்ஜி... கோப்ரா ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் விக்ரம் - கோப்ரா திரைப்படம்

நடிகர் விக்ரம் நடிப்பில் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள கோப்ரா திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

'ரசிகர்கள்தான் எனது எனர்ஜி...!' - கோப்ரா ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் விக்ரம்
'ரசிகர்கள்தான் எனது எனர்ஜி...!' - கோப்ரா ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் விக்ரம்

By

Published : Aug 25, 2022, 10:38 PM IST

சென்னை:விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா‌ படத்தின்‌ ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று(ஆகஸ்ட் 25) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விக்ரம், துருவ் விக்ரம், மீனாட்சி, மிருணாளினி, ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதில் பேசிய நடிகை மீனாட்சி, “நான் என்னுடைய இயக்குநர் அஜய்க்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன். அவர் இல்லை என்றால் இதில் நான் நடித்து இருக்கமாட்டேன். உங்களைப்போலவே நானும் ’கோப்ரா’ படத்தை திரையரங்குகளில் பார்க்க ஆர்வமாக உள்ளேன்” என்றார்.

நடிகை மிருணாளினி ரவி பேசுைகையில், “இயக்குனர் அஜய்க்கு நன்றி. நான் விக்ரமின் மிகப்பெரிய ரசிகை. அவருடன் நடித்தது கனவு நனவானது போன்று உள்ளது. உங்களைப் போலவே நான் மிகவும் ஆர்வமாக உள்ளேன்” எனப் பேசினார். படத்தின் நாயகியான நடிகை ஶ்ரீ நிதி ஷெட்டி, “விக்ரம் உடன் நடிப்பது என்னுடைய கனவு. அது தற்போது நனவாகி உள்ளது. உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. எல்லோரும் திரையரங்குகளில் போய் கோப்ரா படத்தைப் பார்க்கவும்” என்றார்.

நடிகர் விக்ரமின் மகனான நடிகர் துருவ் விக்ரம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகையில், “எனக்கே சங்கடமாக இருந்தது. கோப்ரா டீமுடன் மேடையில் அமர்வதற்கு. இங்கு வந்ததற்கு பெருமையாக உள்ளது. இந்த காலகட்டத்தில் திரையரங்குகளில் ஒரு திரைப்படம் நிறைய நாட்கள் ஓடுவது பெரிய விஷயமாக உள்ளது.

இப்படம் அஜய் ஞானமுத்துவின் உழைப்பிற்காக நன்றாக ஓடும் என்று நம்புகிறேன். அப்பா கடின உழைப்பாளி என்று எல்லோருக்கும் தெரியும். மகான் படத்தில் உடன் நடிக்கும் அவரது எனர்ஜியைப் பார்த்து வியந்துள்ளேன். இதுகுறித்து கேட்டபோது இந்த இடத்திற்கு வருவதற்குத் தான் நான் போராடினேன். இதெல்லாம் எனக்கு சாதாரணம் என்றார். நிச்சயம் அனைவரும் திரையரங்குகளில் சென்று இப்படத்தைப் பாருங்கள்” என்றார்.

நடிகர் விக்ரம் பேசுகையில், “படத்திற்காக பல்வேறு நகரங்களுக்குச் சென்றோம். எனது படம் திரையரங்குகளில் வெளியாகி மூன்று ஆண்டுகள் ஆகிறது. நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு ரசிகர்களை சந்தித்தது புதிய‌ எனர்ஜியை‌ கொடுத்துள்ளது. ரசிகர்களின் அன்புக்கு நன்றி. ஒவ்வொரு ஊரையும் மிகவும் ரசித்தேன். நிச்சயம் படம் உங்களை மகிழ்விக்கும் என்று நம்புகிறேன். திரையரங்குகளில் பார்த்து ரசியுங்கள் நன்றி” எனப் பேசினார்.

இதையும் படிங்க: விக்ரமின் அசத்தலான கோப்ரா ட்ரெய்லர் வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details