தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மெட்ரோ நிர்வாகம் மீது இளங்கோ குற்றச்சாட்டு! - மெட்ரோ ஊழியர்கள் சங்கத்தின் துணை தலைவர்

சென்னை: 'அனைத்து தொழிலாளர்களையும் ஒப்பந்த தொழிலாளர்களாக மாற்ற மெட்ரோ நிர்வாகம் முயற்சித்துவருகிறது' என மெட்ரோ ஊழியர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் இளங்கோ குற்றம்சாட்டியுள்ளார்.

இளங்கோ

By

Published : Jun 3, 2019, 8:51 AM IST

மெட்ரோ ரயில் நிறுவனத்தில் நிரந்தர ஊழியர்கள் இருக்கும்போது ஒப்பந்த ஊழியர்களை பணிக்கு அமர்த்தி அவர்களுக்கு அதிக சம்பளம் கொடுப்பதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்ட ஏழு ஊழியர்களை மெட்ரோ நிர்வாகம் பணிநீக்கம் செய்தது. தற்போது மேலும் ஆறு பேரை பணிநீக்கம் செய்து மெட்ரோ நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து மெட்ரோ ஊழியர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் இளங்கோ நமது ஈடிவி பாரத்துக்காக அளித்த பிரத்யேக பேட்டியில், "அனைத்துப் பணிகளையும் ஒப்பந்த ஊழியர்களுக்குக் கொடுத்ததைக் கண்டித்து சிஐடியூ தலைவர் சவுந்தர்ராஜன் நிர்வாகத்திற்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் கடிதம் எழுதினார். இவ்வாறு கடிதம் எழுதுவது மிரட்டல் விடுக்கும் விதமாக உள்ளது எனக் கூறி, விசாரணை நடத்தி ஏழு பேரை மெட்ரோ நிர்வாகம் பணி நீக்கம் செய்தது.

மெட்ரோ ஊழியர்கள் சங்கத்தின் துணை தலைவர் இளங்கோ

தற்போது மேலும் மூன்று பேரை சமிக்ஞையை (சிக்னல்) பழுது ஏற்படுத்தினார்கள் என்ற காரணத்தை கூறி அவர்களை இடைநீக்கம் செய்துள்ளது. ஆனால் அவர்களுக்கு அளித்த குற்ற அறிக்கையில் அவர்கள் பணிக்கு சரியாக வரவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் இருந்தே மெட்ரோ நிர்வாகத்தின் போலித்தனம் தெரிகிறது.

இதேபோல் பல்வேறு காரணங்களை கூறி நிர்வாகம் மொத்தம் 13 பேரை பணிநீக்கம் செய்திருக்கிறது. எல்லா தொழிலார்களையும் ஒப்பந்த ஊழியர்களாக மாற்ற மெட்ரோ நிர்வாகம் முயற்சிக்கிறது. பயணிகளுக்கு பாதுகாப்பான பயணத்தை கொடுக்கவும் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை வாய்ப்பினை பாதுகாக்கவுமே நாங்கள் போராடுகிறோம்" என தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details