சென்னை: தமிழ்நாட்டில் தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 28 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. மாவட்டங்கள் 3 வகையாக பிரிக்கப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக சென்னை தலைமைசெயலகத்தில் இன்று(ஜூன்.25) காலை 11 மணியளவில் மருத்துவ வல்லுநர்கள், சுகாதாரத்துறை அலுவலர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.