சென்னையில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் சென்னை நகர் முழுவதும் பல இடங்களில் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கியுள்ளது.
சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் புளியந்தோப்பு டிகாஸ்டர் சாலை, அம்பேத்கர் கல்லூரி சாலை ஆகிய பகுதிகளில், தேங்கிய மழை நீரை வெளியேற்றும் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
தலமைச்சர் மு.க. ஸ்டாலின் திடீர் ஆய்வு மேலும் புளியந்தோப்பு பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணிகளை துரித்தபடுத்த மாநகராட்சி அலுவலர்களிடம் தெரிவித்தார்.
திடீர் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் இந்த ஆய்வின்போது கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு, ககன்தீப் சிங் பேடி உள்பட பலர் உடன் இருந்தனர். சென்னையில் மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சுரங்கப்பாதையில் சிக்கிய பேருந்து - பல மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு