சென்னை:தமிழ்நாட்டிற்கு புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் துபாயில் நடைபெறும் கண்காட்சியில் பங்கேற்க வரும் மார்ச் 26, 27ஆகிய தேதிகளில் முதலமைச்சர் ஸ்டாலின் அங்கு செல்கிறார். 192 நாடுகள் பங்கேற்கும் துபாய் கண்காட்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கிறார்.
விரைவில் முதலமைச்சர் ஸ்டாலின் துபாய் பயணம்! - புதிய முதலீடுகளை ஈர்க்க ஸ்டாலின் துபாய் பயணம்
தமிழ்நாட்டிற்கு புதிய முதலீடுகளை ஈர்க்க வருகிற மார்ச் 26, 27 ஆகிய தேதிகளில் முதலமைச்சர் ஸ்டாலின் துபாய் சுற்றுப்பயணம் செல்லயிருக்கிறார் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சராக பதவியேற்றபின்னர் முதன்முறையாக வெளிநாடு பயணமாக, துபாய் நாட்டிற்குப் பயணம் மேற்கொள்கிறார். கண்காட்சியில் தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் விவசாயம், கைத்தறி, சிறு தொழில் உள்ளிட்ட துறைகளின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.
இதையும் படிங்க: கோவை மாநகராட்சி கவுன்சிலர்கள் பதவியேற்பு விழா: முதலமைச்சர் ஸ்டாலின் பெயரைக்கூறி பொறுப்பேற்பு