தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Ponmudi:அமைச்சர் பொன்முடியுடன் முதலமைச்சர் தொலைபேசியில் பேச்சு! - phone call

அமலாக்கத்துறையால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியுடன் முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசி உள்ளார்.

phone call
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் பேச்சு

By

Published : Jul 18, 2023, 11:02 AM IST

Updated : Jul 18, 2023, 3:38 PM IST

சென்னை:உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 18) தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “அமலாக்கத் துறையினர் நடத்திய விசாரணை தொடர்பான விபரங்களை கேட்டறிந்த முதலமைச்சர் துணிச்சலுடனும், சட்ட ரீதியாகவும் எதிர்கொள்ளுமாறு அறிவுரை கூறினார்.

மத்திய பாஜக அரசின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளை எதிர்த்து நின்று முறியடிக்க தார்மீக ரீதியாகவும், அரசியல் மற்றும் சட்ட ரீதியாகவும் கட்சி என்றும் துணை நிற்கும் என உயர் கல்வித்துறை அமைச்சரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்” என குறிப்பிடப்பட்டு உள்ளது.

முன்னதாக, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் வீடு மற்றும் அவர் சம்பந்தப்பட்ட 8 இடங்களில் நேற்று (ஜூலை 17) காலை 7 மணி முதல் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். மேலும், அவரது மகனும் கள்ளக்குறிச்சி எம்.பியுமான கெளதம சிகாமணி வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

இந்நிலையில் 13 மணி நேரத்திற்கு மேலாக நடந்த இந்த சோதனையின் முடிவில் கணக்கில் காட்டப்படாத வெளிநாட்டு பணம் மற்றும் சில முக்கிய ஆவணங்கள் சிக்கின. அதை எடுத்துச்சென்ற அமலாக்கத்துறையினர் அமைச்சர் பொன்முடியையும் விசாரணைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து அமைச்சர் பொன்முடியிடம் நடைப்பெற்ற விசாரணை நிறைவு பெற்றது. நேற்று இரவு 9 மணியளவில் தொடங்கிய இந்த விசாரணை நள்ளிரவை கடந்து நீடித்த நிலையில் அதிகாலை 3 மணியளவில் விசாரணை நிறைவு பெற்றது. சுமார் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதன்பின் அவர் வீடு திரும்பினார். இதனிடையே இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் ஆஜராக அமலாக்கத்துறை அமைச்சர் பொன்முடிக்கு சம்மன் அளித்துள்ளது என்று அவரின் வழக்கறிஞர் சரவணன் தெரிவித்துள்ளார்.

மேலும், கொள்கை ரீதியாகவும் அரசு நிர்வாக ரீதியாகவும் ஆளுநர் ரவியை தொடர்ந்து எதிர்ப்பதால் தான் அமைச்சர் பொன்முடியை குறி வைத்துள்ளார்கள். ஆளுநர் டெல்லி சென்ற ஒரு வாரத்தில் அமலாக்கத்துறை அமைச்சர் வீட்டில் சோதனை நடத்தியுள்ளது. 2007ல் நடந்த வழக்குக்கு 2023ல் ஆவணங்கள் தேடினால் எவ்வாறு கிடைக்கும் என வழக்கறிஞர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அமைச்சர் அறிவிப்பார் என தெரிவித்தார்.

இதையும் படிங்க:Oommen Chandy: கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி காலமானார்

Last Updated : Jul 18, 2023, 3:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details