தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரூபி க்யூபில் ஸ்டாலின் உருவப்படம்.. சிறுவனுக்கு பெரியார் சிலை பரிசு.. - stalin present periyar statue to boy

ரூபி க்யூபில் தனது உருவப்படத்தை வரைந்த சிறுவனுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெரியார் சிலையை பரிசாக கொடுத்துள்ளார்.

ரூபி க்யூபில் ஸ்டாலின் உருவப்படம்.. சிறுவனுக்கு பெரியார் சிலை பரிசு..
ரூபி க்யூபில் ஸ்டாலின் உருவப்படம்.. சிறுவனுக்கு பெரியார் சிலை பரிசு..

By

Published : Jun 26, 2021, 2:46 PM IST

சென்னை: கொளத்தூரைச் சேர்ந்தவர்கள் பார்த்தசாரதி, கலையரசி தம்பதி. இவர்களது மகன் சாய் சித்தார்த்(5). இவர் 928 ரூபி க்யூபை கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உருவப் படத்தை வரைந்துள்ளார்.

நேற்று சாய் சித்தார்த் தனது பெற்றொருடன் முதலமைச்சரை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அப்போது அவருக்கு முதலமைச்சர், தந்தை பெரியார் சிலை ஒன்றை பரிசாக வழங்கினார். மேலும் முதலமைச்சர், பெரியாரின் பெருமைகள் குறித்து சிறுவனுக்கு எடுத்துக் கூறியுள்ளார்.

ரூபி க்யூபில் ஸ்டாலின் உருவப்படம்

க்யூட் புகைப்படம் - வைரல்;

அவர்களின் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

ஸ்டாலின் சொல்வதை ஆர்வமாக கேட்கும் சிறுன் சாய்நாத்

முதலமைச்சர் கையில் பெரியார் சிலையை வைத்துக்கொண்டு பேசுவதை சிறுவன் ஆர்வமாக கேட்கும் புகைப்படம் வைரலாகியுள்ளது. சிறுவன் சாய்நாத்துக்கு உதயநிதி பரிசுக்கோப்பை வழங்கி வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க; ஒலிம்பிக்: ரூ.3 கோடி பரிசுத்தொகை - ஸ்டாலின் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details