தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

உலகை வெல்லும் இளைய தமிழ்நாடு: 'நான் முதல்வன்' புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின் - உலகை வெல்லும் இளைய தமிழகம் நான் முதல்வன்

தமிழ்நாடு இளைஞர்கள் எதிர்காலம் சிறக்க தனது 69ஆவது பிறந்தநாளில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டமான ‘நான் முதல்வன்’ என்கிற புதிய திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின் நான் முதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்தார், cm stalin launch of skills development program for tamil nadu youth
நான் முதல்வன் - புதிய திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்,முதலமைச்சர் ஸ்டாலின் நான் முதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்தார், cm stalin launch of skills development program for tamil nadu youth

By

Published : Mar 1, 2022, 3:34 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டத் தொடக்க விழா கலைவாணர் அரங்கத்தில் இன்று (மார்ச்.1) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாட்டின் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள், படிப்பில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் வகையில் திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாகிய ‘நான் முதல்வன்’ என்கிற புதிய திட்டத்தைத் தொடங்கி வைத்து, இத்திட்டத்திற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இலச்சினையையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.

உலகை வெல்லும் இளைய தமிழ்நாடு : நான் முதல்வன் - புதிய திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

இந்நிகழ்ச்சியின் போது, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான உயர் கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டி பாடநூலை வெளியிட்டு, இதற்கென உருவாக்கப்பட்டுள்ள naanmudhalvan.tnschools.gov.in என்ற இணையதளத்தையும் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கியதுடன், கலந்து கொண்ட மாணவ, மாணவியர்களுக்கு உயர்கல்வி / வேலைவாய்ப்பு குறித்த கையேடுகளை வழங்கியும் முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்பித்தார்.

இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

மேலும், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் முக்கிய நோக்கம், ஆண்டுக்குப் பத்து லட்சம் இளைஞர்களைப் படிப்பில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறமையில் மேம்படுத்தி நாட்டுக்கு வழங்குதல் ஆகும்.

தமிழ்நாடு இளைஞர்கள் எதிர்காலம் சிறக்க இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு திட்டம்
நான் முதல்வன் திட்டத்தின் சிறப்பம்சம்
  • அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவ, மாணவியர்களின் தனித் திறமைகளை அடையாளம் கண்டு அதனை மேலும் ஊக்குவிப்பது.
  • அடுத்தடுத்து அவர்கள் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், எப்படிப் படிக்கலாம் என்றும் வழிகாட்டப்படும்.
  • தமிழில் தனித்திறன் பெறச்சிறப்புப்பயிற்சியுடன் ஆங்கிலத்தில் எழுதவும், சரளமாகப் பேசுவதற்கும், நேர்முகத் தேர்வுக்குத் தயாராவது குறித்தும் பயிற்சிகள் வழங்கப்படும்.
  • தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு Coding, Robotics போன்ற பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.
  • ஒவ்வொரு துறையிலும் தலைசிறந்த சாதனையாளர்களைக் கொண்டு கோடை சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும்.
  • இவற்றைத் தவிர, மனநல மருத்துவர்கள், உடல்நல மருத்துவர்களைக் கொண்டு திடமான உணவு வகைகள் உட்கொள்வது குறித்து ஆலோசனைகள் வழங்கப்படும்.
தமிழ்நாடு இளைஞர்கள் எதிர்காலம் சிறக்க இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு திட்டம்
  • உடற்பயிற்சி, நடை, உடை, நாகரிகம், மக்களோடு பழகுதல், ஆகியவை குறித்தும் பயிற்சிகள் வழங்கப்படும்.
  • தமிழ்ப் பண்பாடு, மரபு குறித்த விழிப்புணர்வும் மாணவ, மாணவியர்களிடம் ஏற்படுத்தப்படும்.
  • இப்பயிற்சிகள் அனைத்தும், தலைசிறந்த பயிற்சியாளர்களைக் கொண்டு நேரடிப் பயிற்சி, இணைய வழிப்பயிற்சி, அவரவர் கல்லூரியில் பயிற்சி, மாவட்ட ரீதியாகப் பயிற்சி எனத் தேவைக்கேற்ப பயிற்சிகள் அளிக்கப்படும்.
  • ஒவ்வொரு பள்ளியிலும் வழிகாட்டி ஆலோசனை மையம் உருவாக்கப்படும்.
  • இதற்கென தனியே கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்குத் தொடர் வகுப்புகள் நடத்தப்படும்.
  • முன்னாள் மாணவர்களைக் கொண்டு அரசுப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்குத் தொடர் நெறிப்படுத்தும் (mentoring) முறையும் அறிமுகப்படுத்தப்படும்.
நான் முதல்வன் - புதிய திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
  • கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு உறுதி செய்ய அவரவர் விருப்பத்திற்கேற்ப அயல்நாட்டு மொழிகள் (Foreign Language) கற்பிக்கப்படுவதற்கு இத்திட்டத்தில் வழிவகை செய்யப்படும்.
  • அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் Industry 4.0 தரத்திற்கு உயர்த்தப்படும்.
  • மாணவ, மாணவியர்களின் தகுதி மற்றும் ஆர்வத்திற்கு ஏற்ப, நாட்டின் தலைசிறந்த நிறுவனங்கள் / புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் / திறன் மேம்பாட்டு நிறுவனங்களில் சேர்க்கையையும் இந்த தொடர் பயிற்சிகள் மூலம் உறுதி செய்யப்படும்.
  • தமிழ்நாடு அரசுத்துறை மற்றும் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள், ஒன்றிய அரசின் வேலைவாய்ப்புகள், பிற மாநிலங்களின் வேலைவாய்ப்புகள் ஆகிய அனைத்தும் இத்திட்டத்தின்கீழ் அறிவிப்புகளாக வெளியிடப்பட்டு, பயிற்சிகள் ஒருங்கிணைக்கப்படும்.
உலகை வெல்லும் இளைய தமிழகம் : நான் முதல்வன்
  • பயிற்சி பெற்ற பயனாளிகள் வேலைவாய்ப்பு பெறுவதையும், அதைத் தொடர்வதையும், தொடர்ந்து கண்காணிப்போம்.
  • இதைத்தவிர, ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு முகாம்களும் தேவைகளின் அடிப்படையில் நடத்தப்படும். இத்திட்டத்தின் அனைத்து விவரங்களும் அடங்கிய வலைத்தள பலகை (Portal) உருவாக்கப்படும்.
  • முதலமைச்சர் ஸ்டாலினின் நேரடி கண்காணிப்பில், சிறப்புத் திட்டச்செயலாக்கத்துறை இப்புதிய திட்டமான ‘நான் முதல்வன்’ திட்டத்தை ஒருங்கிணைக்கும்.
  • மேலும், மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு இத்திட்டத்தைச் செயல்படுத்தும்.
    முதலமைச்சர் ஸ்டாலின் நான் முதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்தார்


இந்நிகழ்ச்சியில், அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, சிறப்பு விருந்தினர்களாகச் சென்னை, பிரிட்டிஷ் தூதரகத்தின் துணை உயர் ஆணையர் ஆலிவர் பால்ஹட்செட், சர்வதேச சதுரங்க கிராண்ட் மாஸ்டர் விசுவநாதன் ஆனந்த், (இணைய வழியாக), இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் அறிவியலாளர் மயில்சாமி அண்ணாதுரை, கிஸ்ஃப்ளோ நிறுவனர் மற்றும் முதன்மைச்செயல் அலுவலர் சுரேஷ் சம்பந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், Daimler India Commercial Vehicles நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் முதன்மைச்செயல் அலுவலர் சத்யகாம் ஆர்யா, இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் தங்கராசு, NASSCOM செயல் இயக்குநர் டாக்டர் சந்தியா சிந்தலா, காவல்துறைத் தலைமை இயக்குநர் செ. சைலேந்திர பாபு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டல் நிபுணர் நெடுஞ்செழியன், இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் காமகோடி வீழிநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்ற வேண்டும் : ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

For All Latest Updates

TAGGED:

cm stalin

ABOUT THE AUTHOR

...view details