சென்னை:தமிழ்நாடு அரசின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள சிமெண்ட் 'வலிமை' என்ற பெயரில் இன்று (நவ.16) முதல் வெளிசந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதை முதலமைச்சர் ஸ்டாலின் (MK stalin) தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார். முன்னதாக சட்டப்பேரவையில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கட்டுமானத்திற்கு தேவையான மூல பொருள்களின் விலையேற்றம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், வலிமை சிமெண்ட் (valimai cement) அரசால் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் தனியார் சிமெண்ட் மூட்டை ஒன்றின் விலை 420 முதல் 450 ரூபாயாக இருந்தது. இந்த விலை ஜுன் மாதத்தில் 470 முதல் 490 ரூபாயாக உச்சத்தில் உயர்ந்தது. விலை ஏற்றம் குறித்து ஜுன் 14 ஆம் தேதி தனியார் சிமெண்ட் உற்பத்தியாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.