தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Pongal Gift Hamper: பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த ஸ்டாலின் - பொங்கல் பரிசுத் தொகுப்பு 2022

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் 2.15 கோடி குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு
பொங்கல் பரிசுத் தொகுப்பு

By

Published : Jan 4, 2022, 12:54 PM IST

Updated : Jan 4, 2022, 2:08 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் அரசு சார்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. அதன்படி இந்தாண்டு 2022, தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில், ரேஷன் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.

அதன்படி பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இன்று (ஜன.4) தொடங்கி வைத்தார்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர்

21 பொருட்கள் என்ன?

  1. மஞ்சள்தூள்
  2. மிளகாள்தூள்
  3. மல்லித்தூள்
  4. கடுகு
  5. சீரகம்
  6. நெய்
  7. மிளகு
  8. புளி
  9. கடலைப்பருப்பு
  10. பாசிப்பருப்பு
  11. உளுத்தம்பருப்பு
  12. உப்பு
  13. ரவை
  14. கோதுமை மாவு
  15. வெல்லம்
  16. பச்சரிசி
  17. முந்திரிப்பருப்பு
  18. திராட்சை
  19. ஏலக்காய்
  20. முழு கருப்பு ஆகிய மளிகை பொருட்கள் துணிப்பையுடன் தொகுப்பாக வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள 2 கோடியே 15 லட்சத்து 67 ஆயிரத்து 122 ரேஷன் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ரூ.1,296.88 கோடி செலவில் வழங்கப்படுகிறது. இதையடுத்து இன்று முதல் ரேஷன் கடைகளில் டோக்கன் வழங்கப்பட்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகிக்கப்பட உள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்பு

இந்த நிகழ்ச்சியில், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியசாமி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: தடுப்பூசி போட்டும் ஒமைக்ரான் பாதிப்பு இருந்தால் வீட்டிலேயே இருங்கள் - மா.சு அறிவுரை

Last Updated : Jan 4, 2022, 2:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details