தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலை விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிதியுதவி!

சென்னை: காவல் துறை வாகனம் மோதி உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு மூன்று லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

edapadi k palanisamy

By

Published : Nov 9, 2019, 7:18 PM IST

Updated : Nov 9, 2019, 7:52 PM IST

இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி.கே. பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் சொக்கம்பட்டி அருகேயுள்ள புளியம்பட்டி நோக்கி காவல்துறை வாகனம் சென்று கொண்டிருந்தது. திரிகூடபுரம் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது காவல்துறை வேனின் டயர் வெடித்து, நிலைதடுமாறி அருகில் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த நபர்களின் மீது மோதியது.

இந்த விபத்தில் அதே பகுதியைச் சேர்ந்த மைதீன் பிச்சை என்பவரின் மனைவி ஆயிஷா பானு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் மூன்று பேர் இதில் காயமடைந்தனர்.

விபத்தில் இறந்த ஆயிஷா பானு என்கிற மல்லிகா குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன். விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மருத்துவமனை அலுவலலர்களுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் உத்தரவிட்டுள்ளேன்.

இவர்கள் அனைவரும் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும். காவல் துறை வாகனம் மோதியதில் உயிரிழந்த ஆயிஷா பானு குடும்பத்துக்கு மூன்று லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டுள்ளேன்"என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க: இயற்கை விவசாயிகள் உருவாக்கிய 'உழவர் வேளாண் அங்காடி'

Last Updated : Nov 9, 2019, 7:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details