சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரஜினிகாந்த், இன்று (டிச.12) தனது 73வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்த நிலையில், அவரது வீட்டின் முன்பு வழக்கமாக ரசிகர்கள் குவியத் தொடங்கி உள்ளனர். அதேநேரம், திரைப் பிரபலங்கள் முதல் அரசியல் பிரமுகர்கள் வரை பலரும் தங்களது வாழ்த்துகளை ரஜினிகாந்திற்கு தெரிவித்து வருகின்றனர்.
“உச்ச நட்சத்திரமாக மக்களை மகிழ்விக்க விரும்புகிறேன்” - ரஜினிகாந்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!
CM MK Stalin wishes to Rajinikanth: ரஜினிகாந்திற்கு தனது பிறந்தநாள் வாழ்த்துகளை முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
Published : Dec 12, 2023, 10:00 AM IST
அந்த வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ள வாழ்த்து செய்தியில், “அன்பிற்கினிய நண்பர் 'சூப்பர்ஸ்டார்' ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். மகிழ்ச்சியோடும், மனநிறைவோடும் பல வெற்றிப் படங்களைத் தந்து உச்ச நட்சத்திரமாக மக்களை மகிழ்விக்க விழைகிறேன்” என தனது X சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:சேது படம் வெளியாகி 24 ஆண்டுகள் நிறைவு.. சீயானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த நடிகர் விக்ரம் ..!