தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ராமதாஸின் 82ஆவது பிறந்தநாள்: வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின்! - ராமதாஸுக்கு வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின்

பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸூக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ட்விட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் வாழ்த்து
ஸ்டாலின் வாழ்த்து

By

Published : Jul 25, 2021, 10:53 AM IST

சென்னை:பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் இன்று (ஜூலை 25) தனது 82ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

இவருக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், தொண்டர்களும் தங்களது பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், 'பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாஸுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!

ஸ்டாலின் வாழ்த்து

இடஒதுக்கீடு உள்ளிட்ட அரசியல் உரிமைகளுக்காகப் போராடியும், வாதாடியும் வரும் அவர் நீண்ட காலம் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க: கிரீமிலேயர் வருமான வரம்பு உயர்வு குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை

ABOUT THE AUTHOR

...view details