தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“கலைஞானி கமல்ஹாசன்” - முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!

Kamal Haasan 69th Birthday: நடிகரும், அரசியல் பிரமுகருமான கமல்ஹாசனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து உள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 7, 2023, 9:48 AM IST

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கமல்ஹாசன், இன்று (நவ.7) தனது 69வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்த நிலையில், திரைப்பிரபலங்கள் முதல் அரசியல் பிரமுகர்கள் வரை பலரும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளை கமல்ஹாசனுக்கு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டு உள்ள X வலைத்தளப் பதிவில், “கலையுலகில் சாதனைகள் பல படைக்கும் கலைஞானி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். நலம் சூழ வாழிய பல்லாண்டு” என தெரிவித்து உள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக உள்ள கமல்ஹாசன், சமீபத்தில் திமுக அங்கம் வகிக்கும் INDIA கூட்டணியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இதனையடுத்து, மு.க.ஸ்டாலின் உடனான சந்திப்பும் கமலுக்கு இருந்து வந்தது. அது மட்டுமல்லாமல், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தியின் பாரத் ஜோடா யாத்ரா பயணத்தின்போது, ராகுல் காந்தி உடன் கமல்ஹாசன் நடத்திய உரையாடல் தேசிய அளவில் பேசப்பட்டது.

முன்னதாக, கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் KH 234 படத்திற்கான டைட்டில் வீடியோ 'Thug Life" என்ற பெயர் உடன் நேற்று பிறந்தநாள் பரிசாக வெளியிடப்பட்டது. இந்தப் படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கிறது.

ஏ,ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் துல்கர் சல்மான், ஜெயம் ரவி மற்றும் த்ரிஷா ஆகியோர் இணைந்துள்ளதாக படக்குழு தரப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல், கமல்ஹாசனின் 233வது படத்தை எச்.வினோத் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:அரசியல் கேள்விகளை தவிர்த்த குஷ்பு!

ABOUT THE AUTHOR

...view details