தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'பெண்களின் கண்களுக்கு ஒளியூட்டுவது கல்வி' - முதலமைச்சர் ஸ்டாலினின் ’மலாலா தின’ பதிவு - கல்வி

உலக மலாலா தினத்தையொட்டி, ”பெண்கள் நாட்டின் கண்கள், அந்தக் கண்களுக்கு ஒளியூட்டுவது கல்வி” என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

உலக மலாலா தினம்
உலக மலாலா தினம்

By

Published : Jul 12, 2021, 12:34 PM IST

சர்வதேச அளவில் ஒவ்வொரு பெண் குழந்தையின் கல்வி அடிப்படை உரிமையும் காக்கப்பட வேண்டும் என்பதை அறிவுறுத்தும் விதமாக, மலாலா யூசப்சையின் பிறந்தநாளான ஜூலை 12 ஆம் தேதி உலக மலாலா தினம் கொண்டாடப்படுகிறது.

இளம் போராளி

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இளம் போராளி மலாலா யூசப்சையி, பெண்களின் கல்வி, அடிப்படை உரிமைகளுக்கு குரல் கொடுத்ததால் இவர் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளானார்.

மரணத்தின் விளிம்பு வரை சென்று மீண்டு வந்து மலாலா, தொடர்ந்து பெண்களின் கல்விக்காகவும், உரிமைக்காகவும் குரல் கொடுத்து வருகிறார். இவருக்கு 2014ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இவரின் பிறந்தநாளான ஜூலை 12ஆம் தேதியை கடந்த் 2013ஆம் ஆண்டு உலக மலாலா தினமாகஐநா அறிவித்து கவுரவப்படுத்தியது.

முதலமைச்சர் பதிவு

இன்று (ஜூலை.12) உலக மலாலா தினம் கொண்டாடப்படுவதையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், "பெண்கள் நாட்டின் கண்கள், அந்தக் கண்களுக்கு ஒளியூட்டுவது கல்வி. நீதிக் கட்சி ஆட்சியின்போதே ”பெண் கல்விக்கு முக்கியத்துவம் தந்த மாநிலம்” என்ற சிறப்புக்கு உரியது தமிழ்நாடு என்பதை பெருமையுடன் நினைவுபடுத்த விரும்புகிறேன்" என்று பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

முதலமைச்சர் பதிவு

இதையும் படிங்க: சாதிக்க பிறந்தவள் மலாலா!

ABOUT THE AUTHOR

...view details