தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை பாதிப்பைக் கட்டுப்படுத்த, கடந்த மாதம் 10ஆம் தேதிமுதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் தொற்று பாதிப்பு குறையாததால், தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு மே 24ஆம் தேதி அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்த ஊரடங்கு வருகிற 7ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது, தமிழ்நாட்டில் சராசரியாக நாள்தோறும் 25 ஆயிரம் பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா தடுப்பு நடவடிக்கை, ஊரடங்கு உள்ளிட்டவை குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மருத்துவர்கள், வல்லுநர் குழுவினருடன் ஆலோசனை நடத்திவருகிறார். கரோனா நடவடிக்கைகள் குறித்து தங்களது பரிந்துரைகளை அரசுக்குப் பரிசீலனை செய்துவருகிறார்கள்.