முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு மக்கள் சார்ந்த பல நலத்திட்டங்களை செயல்படுத்திவருகிறது. இந்நிலையில், பெண்களின் பாதுகாப்பை பலப்படுத்தவும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் நோக்கிலும் 40 அம்மா ரோந்து வாகனங்கள் உள்ளிட்ட பல சிறப்பு வாய்ந்த நலதிட்டங்களை ஒன்றின் பின் ஒன்றாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இன்று தொடங்கிவைத்தார்.
இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் திரிபாதி, சென்னை பெருநகர ஆணையர் ஏ.கே.விஸ்வநாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நலதிட்டங்களை கொடியசைத்து தொடங்கி வைக்கும் முதலமைச்சர் முதலாவதாக, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்காக ‘அம்மா பேட்ரோல்’ என்ற பெயரில் புதிய ரோந்து வாகனத் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடி அசைத்து தொடங்கிவைத்தார். பின்னர் போக்குவரத்துக் காவலர்களுக்கு 201 உடல் இணை நிழற்பட கருவிகளை வழங்கினார்.
இதன் தொடர்ச்சியாக, தக்காளியை கூழாக்கும் இயந்திரங்களோடு கூடிய ஐந்து வாகனங்களை கொடி அசைத்து தொடங்கிவைத்த முதலமைச்சர், வாகனம் முறையாக செயல்படுகிறதா என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்துடன் ஆய்வு மேற்கொண்டார்.
போக்குவரத்து காவலர் சீருடையில் கண்காணிப்பு கேமரா வசதி இதனையடுத்து, சுற்றுசூழல் மாசுப்பாட்டை குறைக்கும் நோக்கில் பேட்டரியால் இயங்கக்கூடிய பேருந்தை கொடி அசைத்து துவங்கி வைத்த அவர், பின்னர் துணை முதலைச்சர் மற்றும் மற்ற அமைசர்களுடன் இந்த பேருந்தில் பயணம் செய்தார். இப்பேருந்தானது மூன்று மாதங்களுக்கு சோதனை ஓட்டத்தில் செயல்படவுள்ளது.