தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொழில் முதலீடுகளை ஈர்க்கும் உயர்மட்டக் குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை! - Tamil top news

சென்னை: தொழில் முதலீடுகளை ஈர்க்கும் உயர்மட்டக் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (அக். 21) ஆலோசனை நடத்தினார்.

தொழில் முதலீடுகளை ஈர்க்கும் உயர்மட்டக் குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை!
தொழில் முதலீடுகளை ஈர்க்கும் உயர்மட்டக் குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை!

By

Published : Oct 21, 2020, 2:52 PM IST

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (அக். 21) முதலீடுகளை உறுதி செய்யும் பொருட்டு முதலீட்டு வசதிகளை மேம்படுத்துதல், அனுமதிகள் வழங்குதலை துரிதப்படுத்துவதற்காக, உயர்நிலை அதிகாரக் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, எம்.சி. சம்பத், ஆர்.பி. உதயகுமார், உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டு வெளிநாடு பயணம் சென்ற முதலமைச்சர் முன்னிலையில் 8,835 கோடி ரூபாய் முதலீட்டில் 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 55 நிறுவனங்களுடன் 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. அவ்வாறு ஈர்க்கப்பட்டுள்ள முதலீடுகளுக்கான வசதிகளை மேம்படுத்துதல், ஒற்றைச் சாளர முறையில் பெறப்பட்டு நிலுவையில் உள்ள அனுமதிகள், மாநில சுற்றுச்சூழல் பாதிப்பு குழுமத்தால் வழங்கப்படும் சுற்றுச்சூழல் அனுமதி போன்ற பிற அனுமதிகளை துரிதப்படுத்துவதற்கான ஆலோசனை இன்று (அக். 21) மேற்கொள்ளப்பட்டது.

இதையும் படிங்க...அயர்லாந்திலிருந்து பார்த்த மூன்றாம் கண்: மதுரவாயலில் மாட்டிக்கொண்ட 'சைக்கோ முரளி'

ABOUT THE AUTHOR

...view details