தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், நுகர்வோர் பொருள்கள் உற்பத்தியில் உலகளவில் தலைசிறந்த 5 முன்னணி நிறுவனங்களான கேட் ஸ்பேட், பாசில் குழுமம், நைக், அடிடாஸ் ஏஜி, மேட்டல் இங்க் ஆகிய நிறுவனங்களின் தலைமை அலுவர்களுக்கு தமிழ்நாட்டில் முதலீடுகள் செய்திட நேரடியாக கடிதம் எழுதியுள்ளதாக பதிவிட்டுள்ளார்.
நுகர்வோர் பொருட்கள் உற்பத்தியில் தலைசிறந்த நிறுவனங்களுக்கு முதலமைச்சர் கடிதம்! - tn cm letter manufacturing company
சென்னை: தமிழ்நாட்டில் முதலீடு செய்யுமாறு நுகர்வோர் பொருள்கள் உற்பத்தியில் உலகளவிலான தலைசிறந்த 5 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
முதலைமைச்சர் எடப்பாடி பழனிசாமி
மேலும், தமிழ்நாடு நுகர்வோர் பொருள்களை உற்பத்தி செய்வதற்கான சிறந்த சுற்றுச்சூழல் அமைப்பை கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:ஊரடங்கு தளர்வு குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் - அமைச்சர் காமராஜ்