தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா தடுப்புப் பணியின்போது உயிரிழந்த தலைமைக் காவலர் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம்!

சென்னை: சோதனைச்சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்த தலைமைக் காவலரின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

cm
cm

By

Published : May 9, 2020, 9:35 AM IST

கிருஷ்ணகிரி அருகே காவேரிப்பட்டணத்தைச் சேர்ந்த சேட்டு என்பவர், ஓசூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்தார்.

கடந்த 7ஆம் தேதி அன்று தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் உள்ள ஜூஜூவாடியில், கரோனா தீநுண்மி பெருந்தொற்று தடுப்புக்காக அமைக்கப்பட்ட சோதனைச்சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த சரக்கு லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்நிலையில், முதலமைச்சர் பழனிசாமி பணியின்போது உயிரிழந்த தலைமைக் காவலர் சேட்டு குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதாகவும், அவர் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப்பணி வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி அருகே கரோனா தடுப்புப் பணியின்போது லாரி மோதிய விபத்தில் மரணமடைந்த தலைமைக்காவலர் சேட்டு குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க: திருமழிசையில் சந்தை அமைக்கும் பணி குறித்து முதலமைச்சர் ஆய்வுக் கூட்டம்

ABOUT THE AUTHOR

...view details