சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று (செப். 20) ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் சந்தித்தார். அப்போது, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் ‘டையல் ஃபார் வாட்டர் 2.0’ என்ற திட்டத்திற்காகவும், கல்குவாரிகளை சேமித்து நீர்த்தேக்கங்களாக மாற்றிய திட்டத்திற்காகவும் பெற்ற இரண்டு விருதுகளை காண்பித்து, வாழ்த்து பெற்றார்.
இரண்டு விருதுகள் பெற்ற அமைச்சர் வேலுமணி: முதலமைச்சர் வாழ்த்து! - தேசிய நீர் புதுமை திட்டம்
சென்னை: தேசிய நீர் புதுமை, டையல் ஃபார் வாட்டர் 2.0 ஆகிய திட்டத்திற்காக இரண்டு விருதுகள் பெற்ற அமைச்சர் வேலுமணிக்கு முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரிடம் வாழ்த்துபெற்ற அமைச்சர் வேலுமணி
இந்நிகழ்வின்போது, தலைமைச் செயலர் க. சண்முகம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலர் ஹர்மந்தர் சிங், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் டி.என். ஹரிஹரன் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்: அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமல்!