முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திங்கட்கிழமை காலை 11 மணிக்கு, சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் வருகிறார். பின்னர் சேலத்தில் உள்ள வீட்டிற்கு கார் மூலம் செல்கிறார். இதைதொடர்ந்து 21ஆம் தேதி தனது சொந்த ஊரான எடப்பாடி அடுத்த சிலுவம்பாளையத்திற்குச் செல்கிறார்.
சேலத்திற்கு முதலமைச்சர் நாளை வருகை - salam
சேலம்: சென்னையில் இருந்து விமானம் மூலம் நாளை சேலத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகை தரவுள்ளதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
தொடர்ந்து இரண்டு நாள் சேலத்தில் ஓய்வெடுத்துவிட்டு வரும் 22ஆம் தேதி இரவு கார் மூலம் கோயமுத்தூர் சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்ல விருக்கிறார். வாக்கு எண்ணிக்கை நாளான மே 23ஆம் தேதி சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இருப்பார் என்றும், முதலமைச்சரின் சேலம் வருகையை ஒட்டி மாவட்டம் மற்றும் மாநகர் முழுவதும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட காவல்துறையினர் தயாராகி வருகின்றனர்.