தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'திமுக வேஸ்ட்... நாங்க தான் பெஸ்ட்' - முதல்வர் தடாலடி! - வடசென்னை

சென்னை: திமுக ஆட்சியில் எந்த ஒரு திட்டமும் சென்னைக்கு கொண்டுவரவில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி முந்தைய திமுக அரசை சாடினார்.

எடப்பாடி பழனிசாமி

By

Published : Mar 25, 2019, 10:04 PM IST


வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுகவின் கூட்டணி கட்சியான தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன் ராஜா அவர்களை ஆதரித்து ராயபுரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. முதலமைச்சர் வருகையொட்டி ஏராளமான தொண்டர்கள் மற்றும் அதிமுகவின் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பேசியதாவது,

எடப்பாடி பழனிசாமிபேச்சு

இந்திய நாட்டைப் பாதுகாக்க நடைபெறுகின்ற தேர்தல்தான் பாராளுமன்ற தேர்தல். இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு. 130 கோடி பேர் மக்கள் கொண்ட நாட்டில் அவர்களின் பாதுகாப்புக்கும், அவர்களின் வாழ்வாதாரத்துக்கும் தகுதியான பிரதமர் தான் மத்தியில் வரவேண்டும். அந்த தகுதி அனைத்தும் பிரதமர் மோடிக்கு உள்ளது.


அதிமுக கூட்டணியில் சார்பாக நரேந்திர மோடி பிரதமராக வரவேண்டும் என்று தான் நாங்கள் கூட்டணி அமைத்து உள்ளோம். வடசென்னை தொகுதியில் பல்வேறு நலத் திட்டம் கொண்டுவரப்படும். தண்ணீர் பிரச்சினை தீர்க்கப்படும்.


மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களும் கொண்டுவரப்படும். கடந்த கால அதிமுக ஆட்சியில் முதலமைச்சர் ஜெயலலிதா பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்கினார். ஆனால் திமுக ஆட்சியில் முறையாக எந்த ஒரு நலத்திட்டங்களும் செயல்படுத்த வில்லை என்று திமுகவை விமர்சித்தார்.

ABOUT THE AUTHOR

...view details