வழக்கறிஞர்களாக பதிவு செய்யும் இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் மூவாயிரம் ரூபாய் என்று 2 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதற்கு நன்றி தெரிவித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், "இளம் வழக்கறிஞர்கள் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் பொதுமக்களுக்குப் பணியாற்றும் விதமாக அவர்களுக்கு குறிப்பிட்ட காலத்துக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கவேண்டும் என்று பார் கவுன்சில் கோரிக்கை விடுத்தது. நீண்ட காலமாக நிலுவையில் இருந்த இந்த கோரிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமியும், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகமும் சரியான காலத்தில் நிறைவேற்றியுள்ளனர்.