இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை மாநகராட்சி, தெற்கு வட்டாரம் சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு -196 ஈஞ்சம்பாக்கம் அரிச்சந்திரா சாலையிலுள்ள இந்து ஊரூர் மயானபூமியில் எரிவாயு தகன மேடை பராமரிப்பு மற்றும் புனரமைப்பு பணிகளுக்காக 05.10.2020 முதல் 10 நாள்களுக்கு மூடப்படுகிறது.
பராமரிப்பு பணிக்காக ஊரூர் மயானபூமியில் எரிவாயு தகன மேடை மூடல்! - சென்னை மாநகராட்சி ஆணையம்
சென்னை: ஈஞ்சம்பாக்கம் அரிச்சந்திரா சாலையிலுள்ள இந்து ஊரூர் மயானபூமியில் எரிவாயு தகன மேடை பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால் மக்கள் பயன்படுத்த வேண்டாம் என மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
சென்னை
பராமரிப்பு பணிகள் நடைபெறும் நாள்களில் பொதுமக்கள் அருகில் உள்ள பாலவாக்கம், புழுதிவாக்கம் மற்றும் பெசன்ட் நகர் மயான பூமிகளை பயன்படுத்திக் கொள்ளவும்" எனக் குறிப்பிட்டப்பட்டுள்ளது.
ஏற்கனவே, வியாசர்பாடி, முல்லை நகர் இந்து மயான பூமியில் எரிவாயு தகன இயந்திரத்தில் சுடுகல் பழுது நீக்குதல், பராமரிப்பு பணிக்காக மூடப்படும் என மாநகராட்சி அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.