தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வரும் 27ஆம் தேதி வெளியாகிறது +1 வகுப்பு தேர்வு முடிவுகள்! - தேர்வு முடிவுகள்

பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் வரும் 27ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

27 ஆம் தேதி வெளியாகிறது 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
27 ஆம் தேதி வெளியாகிறது 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்

By

Published : Jun 24, 2022, 8:07 PM IST

சென்னை: தமிழ்நாடு மாநிலப்பாடத்திட்டத்தில் பதினொன்றாம் வகுப்பிற்கு நடைபெற்ற தேர்வினை எழுதுவதற்கு 8 லட்சத்து 83 ஆயிரத்து 884 மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். தேர்வுகள் முடிந்த பின்னர் மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு தேர்வு முடிவுகள் தயார் நிலையில் உள்ளன.

இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'மே மாதம் நடைபெற்ற 2021- 22ஆம் கல்வி ஆண்டிற்கான பதினொன்றாம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு முடிவுகள் வரும் 27ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.

மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களில் கட்டணம் இன்றியும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

மேலும் மாணவர்கள் பள்ளிகளில் அளிக்கப்பட்ட உறுதிமொழி படிவத்தில் தெரிவிக்கப்பட்ட செல்போன் எண்ணிற்கும், தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்போன் எண்ணிற்கும் எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்' எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு உதவிக்கரம் நீட்டிய இந்தியா!

ABOUT THE AUTHOR

...view details