சென்னை கோட்டூர்புரம் காவல் நிலைய காவல் துறையினர் நள்ளிரவு 2.30 மணியளவில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது, அடையாளம் தெரியாத நபர் இருசக்கர வாகனத்தில் அந்த இடத்தையே சுற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், காவல் துறையினர் அந்த நபரை வழிமறித்து அவரிடம் விசாரணை மேற்கொள்ள முயன்றபோது தப்பித்துச் சென்றுள்ளார்.
கட்டுக் கட்டாக 500 ரூபாய் நோட்டு! வீசிச்சென்ற அடையாளம் தெரியாத நபர் - kotturpuram
சென்னை: கோட்டூர்புரம் அருகே நள்ளிரவில் காவல் துறையினர் ரோந்தில் ஈடுபட்டபோது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கட்டுக் கட்டாய் 500 ரூபாய் நோட்டுகளை வீசியெறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கட்டுக்கட்டாய் கட்டுக்கட்டாய்
பின்னர், அவரை காவல் துறையினர் விடாமல் துரத்தியதை அடுத்து அந்த நபர் இரு சக்கர வாகனத்தில் இருந்த மூன்று பைகளை வீசி எறிந்துவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, காவல் துறையினர் அவரை துரத்துவதை நிறுத்திவிட்டு அந்த நபர் வீசிச்சென்ற பைகளை ஆய்வு செய்தனர். அதில் ஒரு கோடியே 56 லட்சத்து 61 ஆயிரத்து 560 ரூபாய் இருந்தது தெரியவந்துள்ளது.
தற்போது பைகளை வீசிச்சென்ற அந்த நபர் குறித்து காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.