சென்னை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர்களுக்கு, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இணைய வழியாகப் பதிவுசெய்ய வேண்டும் என அறிவுறுத்தி, அக்கழகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில், ”தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லினை எளிதில் விற்பனை செய்திட இணையவழி பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்டு 2022 ஜனவரி 1 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகிறது.
இந்நிலையில், விவசாயிகளின் நலன்கருதி இணைய வழிப் பதிவுமுறையின் மூலம் விரைவில் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல் ஆவணம், ஆதார் நகல் உள்ளிட்ட ஆவணங்களை விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.