இது குறித்து சிஐசிஎஸ்இ பள்ளிகள் வாரியத்தின் செயலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”கரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. சிஐஎஸ்சிஇ மாணவர்களுக்கான பாடங்கள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன. சிஐசிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்து பொதுத் தேர்வினை எழுத உள்ள 10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 4 ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்கபட உள்ளன.
’பள்ளிகளைத் திறக்க அரசு அனுமதிக்க வேண்டும்’ - சி.ஐ.சி.எஸ்.இ பள்ளிகள் வாரியம் வேண்டுகோள் - பள்ளிகளை திறக்க அரசு அனுமதி
சென்னை : 10, 12ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வினை எதிர்கொள்ள உதவும் வகையில் ஜனவரி 4ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என சி.ஐ.சி.எஸ்.இ பள்ளிகள் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதற்கு அனைத்து மாநிலம், யூனியன் பிரதேச முதலமைச்சர்களும் அனுமதிக்க வேண்டும். மாணவர்கள் பள்ளிகளுக்கு நேரடியாக வருவது செய்முறைத் தேர்வு, பாடங்களில் உள்ள சந்தேகங்களை அறிந்துகொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பள்ளிகள், மாநில அரசுகளின் கரோனா தொற்று பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்படும்.
சி.ஐ.சி.எஸ்.இ 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறுகின்றன. தேர்வு நடைபெறும் நேரங்களில் தேர்தல் நடைபெறாதவகையில் அட்டவணைகளைத் தயாரிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திற்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.