தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரியலூர் மாணவி தற்கொலை விவகாரம்: அண்ணாமலை மீது புகார் - மதவாதத்தை சுட்டிக்காட்டிய பாஜக

பாரதிய ஜனதா கட்சி அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தை தேசிய அளவில் முன்னெடுத்துவரும் நிலையில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிறிஸ்தவ மக்கள் களம் அமைப்பு காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது.

அண்ணாமலை மீது புகார்
அண்ணாமலை மீது புகார்

By

Published : Feb 3, 2022, 6:34 AM IST

சென்னை:இது தொடர்பாக அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கிறிஸ்தவ மக்கள் களம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் அடைக்கல ராஜ் நேற்று (பிப்ரவரி 2) சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் கூறுகையில், “தஞ்சை மாணவி உயிரிழப்பு தொடர்பாக பாஜகவினர் மதவாதத்தைச் சுட்டிக் காண்பித்து அரசியல் செய்துவருகிறார்கள். அந்த மாணவியின் உயிரிழப்பிற்கு உண்மையான நியாயம் கிடைக்க வேண்டும்.

இது தொடர்பாக காப்பாளர் சகாயமேரியை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர். மாணவியின் பெற்றோரும் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் எனக் கோரிக்கைவைத்தனர். நீதிமன்றமும் சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.

ஆனால், பாஜகவினர் மீண்டும், மீண்டும் பொய் பரப்புரை செய்வது மட்டுமல்லாமல் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் பாகுபாட்டை அதிகப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்திலேயே செயல்பட்டுவருகின்றனர்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஐபிஎஸ் அலுவலராக இருந்தவர். அவரே இதுபோன்ற ஒரு பொய் பரப்புரையைச் செய்துவருகிறார். அவருடைய எண்ணம் முழுவதும் வட இந்தியாவைப் போல தமிழ்நாட்டை மாற்ற வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டுவருகிறார்.

கிறிஸ்தவ மக்கள் களம் அமைப்பு

ஆகவே அண்ணாமலை மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காவல் ஆணையரிடம் புகார் மனுவை அளித்துள்ளோம்" என்றார்.

இதையும் படிங்க: ராமஜெயம் கொலை வழக்கு: சிபிஐக்கு உதவ தமிழ்நாடு காவல்துறை அலுவலர்கள் பட்டியல் தாக்கல் செய்ய உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details