தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மதுவுக்கு அடிமையான நபர்; மனைவி, மகளைக் கத்தியால் குத்திவிட்டு தப்பியோட்டம்! - Chitlapakkam alcohol addicted

சென்னை: மதுவுக்கு அடிமையான நபர் தனது மனைவி, மகளைக் கத்தியால் குத்திய சம்பவம் தாம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிட்லபாக்கம் கத்திக்குத்து  chennai latest crime news  chennai news  சென்னை செய்திகள்  மனைவி மகளை கத்தியால் குத்தியவர்  Chitlapakkam knife attack  Chitlapakkam alcohol addicted  alcohol addicted
மனைவி, மகளை குத்திய மதுவுக்கு அடிமையான கணவன்

By

Published : Jul 21, 2020, 11:44 AM IST

தாம்பரத்தை அடுத்த சிட்லபாக்கம் சர்வமங்களா நகர் இரண்டாவது தெருவில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், சீனிவாசன்(40) என்பவர், தனது மனைவி விஜயலஷ்மி(40), மகள் நேத்ரா ஆகியோருடன் வசித்துவருகிறார். வங்கியில் உதவி மேலாளராகப் பணிபுரிந்த இவர், குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு வேலை செய்யாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மேலும், அவ்வப்போது மனைவியிடம் பணம் வாங்கி, குடித்துவந்துள்ளார்.

இன்று அதிகாலை 3 மணியளவில் தனது மனைவியிடம் ஈஷா யோகா மையத்திற்குச் செல்ல வேண்டும் எனக் கூறி பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். அப்போது, ஏற்பட்ட வாக்குவாதத்தின் இடையே, தான் மறைத்துவைத்திருந்த காய்கறி அரியும் கத்தியால் தனது மனைவியை சீனிவாசன் குத்தியுள்ளார். இதனைத் தடுக்கவந்த தனது மகள் நேத்ராவையும் குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

இவர்களின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் இரண்டு பேரையும் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு இருவரும் கொண்டுசெல்லப்பட்டனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த சிட்லபாக்கம் காவல் துறையினர், சீனிவாசனைக் கைதுசெய்து விசாரனை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:சிறுமிக்கு பாலியல் சொந்தரவு அளித்தவர் போக்சோ சட்டத்தில் கைது!

ABOUT THE AUTHOR

...view details