தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை விமான நிலையத்தில் சீன அதிபர் வாகனங்கள்! - china

சென்னை: சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் வாகனங்கள் சென்னை விமான நிலையம் வந்தடைந்துள்ளது.

xi xinping car

By

Published : Oct 10, 2019, 5:48 PM IST

நாளை தமிழ்நாடு வர இருக்கும் சீன அதிபர் ஷி ஜின்பிங், சென்னை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக மாமல்லபுரம் செல்ல இருக்கிறார்.

முன்னதாக கிண்டியில் உள்ள தனியார் விடுதிக்குச் செல்ல இருக்கும் அவர், அங்கிருந்து மாமல்லபுரம் புறப்பட்டுச் சென்று பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.

இந்த நிலையில், சீன அதிபர் பயன்படுத்தும் பிரத்யேக வாகனம் நேற்று முன்தினம் சென்னை விமான நிலையத்திற்கு 747 போயிங் விமானம் மூலம் வந்தடைந்தது.

China President Car Convoy rehearsal

அதிநவீன பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இந்த கறுப்பு நிற கார், 10 விநாடிகளில் 100 கிலோமீட்டர் வேகத்தை அடையும் திறன் படைத்தவையாகும். துப்பாக்கிக் குண்டுகளால் துளைக்க முடியாத அளவுக்கு வலிமையான கார்களான இவை, தற்போது சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சீன அதிபர், இந்திய பிரதமர் வருகையை முன்னிட்டு தீவிர பாதுகாப்பில் காவல்துறை!

ABOUT THE AUTHOR

...view details