தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குளுகுளு சென்னை: அதிகளவிலான பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி - Chennai Rain

சென்னை புறநகர் பகுதியில் இன்று அதிகளவில் பனிமூட்டம் காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

குளுகுளு சென்னை: அதிகளவிலான பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி
குளுகுளு சென்னை: அதிகளவிலான பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி

By

Published : Nov 24, 2022, 10:43 AM IST

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சில நாட்களாகவே அதிகாலை முதல் அதிகப்படியான பனிமூட்டம் காணப்படுகிறது. இந்த நிலையில் இன்று (நவ 24) காலை முதல் சென்னை புறநகர் பகுதியான தாம்பரம், பல்லாவரம், மீனம்பாக்கம் மற்றும் ஆலந்தூர் உள்ளிட்டப் பகுதிகளில் அதிக அளவில் பனிமூட்டம் ஏற்பட்டது.

இதனால் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால், வாகன ஓட்டிகள் முகப்பு விலக்குகளை எரிய விட்டவாறு வாகனங்களை இயக்கினர். மேலும் சென்னை விமான நிலையப்பகுதி முழுவதும் பனிமூட்டம் அடர்ந்து காணப்படுகிறது.

குளுகுளு சென்னை: அதிகளவிலான பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி

இருப்பினும் விமான சேவையில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. இதனிடையே சென்னை புறநகர் பகுதியில் ஒரு சில இடங்களில் சாரல் மழையும் பெய்து வருவதால், சென்னை முழுவதுமே குளிர்ச்சியான சூழல் இருந்து வருகிறது.

இதையும் படிங்க:ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழப்பு - மிதமான மழைக்கு வாய்ப்பு

ABOUT THE AUTHOR

...view details