தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பீதியை ஏற்படுத்தும் கழிவுநீர் வடிகால் பணி; குழந்தைகள் மையத்திற்கு வருபவர்கள் பாதிப்பு

சென்னை மாநகராட்சி குழந்தைகள் மையத்தின் வெளியில் கழிவுநீர் வடிகால் பணியால் குழந்தைகள் மற்றும் பெற்றோர் பாதிப்பு விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரிக்கை.

கழிவுநீர் வடிகால் பணியால் குழந்தைகள் மையத்திற்கு வரும் குழந்தைகள் பாதிப்பு
கழிவுநீர் வடிகால் பணியால் குழந்தைகள் மையத்திற்கு வரும் குழந்தைகள் பாதிப்பு

By

Published : Oct 20, 2022, 5:44 PM IST

Updated : Oct 20, 2022, 6:38 PM IST

சென்னைமுழுவதும் மழைநீர் வடிகால் சீரமைக்கும் பணி மற்றும் கழிவுநீர் வடிகால் சரி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சில இடங்களில் பணிகள் முடிந்த பிறகு வடிகால்கள் சரியாக மூடப்படுவதில்லை, இதனால் அங்கு இருக்கும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றர்.

இந்த நிலையில் மண்டலம் 13 நேதாஜி சாலையில் இயங்கி வரும் சென்னை மாநகராட்சி குழந்தைகள் மையத்தின் வெளியில் நீண்டநாட்களாகக் கழிவுநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது.

அந்த குழந்தைகள் மையத்திலிருந்து சாலைக்கும் செல்லவேண்டும் என்பதால் கட்டையைப் பயன்படுத்தி பாலம் போல் அமைத்துள்ளனர், அதைப் பயன்படுத்தி மட்டுமே கடக்க முடியும். இதனால் குழந்தைகள் மற்றும் பெற்றோர் பீதியுடனே குழந்தைகள் மையத்திற்குச் சென்று வர வேண்டிய நிலை உள்ளது.

இதைச் சரி செய்யவேண்டும் என மாநகராட்சி இடம் புகார் அளித்தும் கிட்டத்தட்ட 3 நாட்கள் கழிந்து விட்டது, ஆனால் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. இதே நிலை தொடர்ந்தால் மக்கள் நீதி மய்யம் சார்பில் போராட்டம் நடைபெறும் என மக்கள் நீதி மய்யத்தின் மாநில மகளிர் அணி செயலாளர் சினேகா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:சேவைத்துறை சார்பில் 28.83 கி.மீ., சாலை சீரமைப்புப் பணி தீவிரம்

Last Updated : Oct 20, 2022, 6:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details