தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தண்ணீர் நிரம்பிய வாளியில் விழுந்த குழந்தை உயிரிழப்பு - pallavaram

பல்லாவரம் அருகே பள்ளியில் விளையாடிக்கொண்டிருந்த ஒன்பது மாத பெண் குழந்தை தண்ணீர் நிரம்பிய வாளியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தண்ணீர் நிரம்பிய வாலியில் விழுந்த குழந்தை பரிதாப உயிரிழப்பு
தண்ணீர் நிரம்பிய வாலியில் விழுந்த குழந்தை பரிதாப உயிரிழப்பு

By

Published : Jun 25, 2022, 12:19 PM IST

சென்னை: பல்லாவரம் அடுத்த ராஜாஜி நகரை சேர்ந்தவர் ஏஞ்சலின் ஜெயஸ்ரீ (24) தர்கா சாலையில் உள்ள தனியார் மழலையர் பள்ளியில் மூன்று நாட்களாக ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். ஏஞ்சலின் பள்ளிக்கு செல்லும் போது தன்னுடன் ஒன்பது மாத பெண் குழந்தை கவிஸ்ரீயையும் உடன் அழைத்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இன்று வழக்கம் போல் ஏஞ்சலின் தனது ஒன்பது மாத பெண் குழந்தையுடன் பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது விளையாடி கொண்டிருந்த கவிஸ்ரீ திடீரென காணவில்லை என்பதால் ஏஞ்சலின் தேடிய போது குளியறையில் இருந்த தண்ணீர் நிரம்பிய வாளியில் மூச்சு திணறிய படி குழந்தை விழுந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக குழந்தை கவிஸ்ரீயை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கவிஸ்ரீ ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

உடலை கைப்பற்றிய பல்லாவரம் போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: யாரோ ஒருவரின் அலட்சியத்தால் பலியான பெண் கவிஞர்... யார் இந்த வாணி கபிலன் ?

ABOUT THE AUTHOR

...view details