சென்னை:ஆவடி அடுத்த மோரை கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, கடந்த 16ஆம் தேதி வீட்டிலிருந்து மாயமானார். அவரது பெற்றோர், அவரை பல்வேறு இடங்களில் தேடியும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.
இதனையடுத்து, ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் ஜெகநாதன் தலைமையிலான காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது போரூர், ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி முத்து (29) சிறுமியை திருமண ஆசைகாட்டி கடத்தி சென்றிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, காவல் துறையினர் இருவரையும் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில், மோரையில் பதுங்கி இருந்த முத்துவை காவல் துறையினர் நேற்று (ஜூலை 22) மாலை சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும், அவரிடம் இருந்து 17வயது சிறுமியை மீட்டனர். பின்னர், இருவரையும் ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையம் கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தினர்.