சென்னை: நீதிமன்ற உத்தரவுகளை குறித்த காலத்தில் அமல்படுத்த வேண்டும் எனவும், அதன் மூலம் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தவிர்க்கலாம் எனவும் வழக்கு ஒன்றில் தலைமை நீதிபதி அமர்வு தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்தியிருந்தது. மேலும், நீதிமன்ற உத்தரவுகளை குறித்த காலத்தில் அமல்படுத்த முடியாவிட்டால் மேல் முறையீடு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தவிர்க்க, நீதிமன்ற உத்தரவுகளை குறித்த காலத்தில் அமல்படுத்த வேண்டும் எனவும், இல்லாவிட்டால் மேல் முறையீடு செய்ய வேண்டும் எனவும் அனைத்து துறை அதிகாரிகளுக்கும், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் அனுப்பியுள்ளதாக தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், தலைமை நீதிபதி அமர்வில் இன்று (ஜூலை 7) தெரிவித்தார்.