சென்னை:மாநகரில் சுமார் 18,757 டிரான்ஸ்பார்மர்கள் உள்ளன, இதில் 7 டிரான்ஸ்பார்மர்களுக்கு மட்டும் மின் விநியோகம் செல்லவில்லை என புகார் எழுந்த நிலையில், விரைவில் மின்விநியோகம் வழங்கப்படும் என தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, "சென்னையில் ஓரிரு இடங்களைத் தவிர பெரும்பாலானப் பகுதிகளில் மின் விநியோகம் சீராகி உள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளான மண்டலம் 6-10 வரை 100% சதவீதம் மின் விநியோகம் உள்ளது.
வட சென்னையைப் பொருத்த வரை, சில இடங்களில் மட்டும் தண்ணீர் தேங்கி உள்ளது. வியாசர்பாடி பகுதியில் ஓரிரு இடங்களில், மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் உள்ள 18,757 டிரான்ஸ்பார்மர்ஸ் உள்ளன. இதில் 7 டிரான்ஸ்ஃபார்மர்ஸுக்கு மட்டும் மின் விநியோகம் செல்லவில்லை.
வெள்ளம் பாதித்தப் பகுதியான பள்ளிக்கரணைப் பகுதியில் படிப்படியாக மின்விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. சென்னையில் 0.04% மட்டுமே மின் இணைப்பு வழங்கப்பட வேண்டும். ஒரு சில இடங்களைத் தவிர, மற்ற இடங்களில் இன்று (டிச. 8) இரவுக்குள் மின்சாரம் வழங்கப்படும்.