அனைத்து ஐ.ஏ.எஸ். அலுவலர்களுக்கும் தலைமை செயலாளர் சண்முகம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், "ஐ.ஏ.எஸ். அலுவலர் பணியில் உள்ளவர்கள் தங்கள் பெயரிலும், தங்களுடைய குடும்பத்தினர் மற்றும் பிற நபர்கள் பெயரிலும் உள்ள தங்களுக்கு சொந்தமான அசையாத சொத்து விவரங்களை ‘ஆன்லைன்’ (இணையவழி) முறையில் தெரிவிப்பது கடந்த 2017ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது.
அந்தவகையில், இந்தாண்டு வருகிற 31ஆம் தேதிக்குள், இணைய வழியில் உள்ள படிவத்தை நிரப்பி ஐ.ஏ.எஸ். அலுவலர்கள் அசையாத சொத்து விவரங்களை தெரிவிக்கவேண்டும். சரியான காரணமின்றி சொத்து விவரங்களை தெரிவிக்காமல் இருக்கும் ஐ.ஏ.எஸ். அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.