சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நீர்வளத்துறை நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநகராட்சியின் சார்பில் புதிய மழைநீர் வடிகால் பணிகள், மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகள், நீர்வழிக் கால்வாய்களில் ஆகாயத் தாமரைகளை அகற்றி தூர்வாருதல் மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
‘ மழைநீர் வடிகால் பணிகளைப் பருவமழைக்கும் முன்னால் முடிக்க வேண்டும்’ - இறையன்பு அறிவுறுத்தல் - மழைநீர் வடிகால் பணி
சென்னையில், மழைநீர் வடிகால் பணிகளைப் பருவமழைக்கும் முன்னால் முடிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு முதன்மை செயலாளர் இறையன்பு அறிவுறுத்தியுள்ளார்.
Etv Bharat
இந்த பணிகளை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று (அக்.09) பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் பிறகு, வடகிழக்குப் பருவமழை விரைவில் தொடங்கவுள்ள நிலையில் அனைத்துப் பணிகளையும் காலதாமதமின்றி விரைவாக மேற்கொள்ள வேண்டும் என அனைத்துத் துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க:அனைத்து பாடத்துறைகளுக்கும் ஒரே பொது நுழைவுத்தேர்வு - மத்திய கல்வித்துறை இணை அமைச்சர்