தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தலைமைச் செயலர் எங்களை அவமதித்துவிட்டார் -டி.ஆர். பாலு குற்றச்சாட்டு - டி.ஆர். பாலு

சென்னை: தலைமைச் செயலர் திமுக எம்பிக்களை உதாசீனப்படுத்தும் வகையில் நடந்துகொண்டதாக திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர். பாலு குற்றஞ்சாட்டினார்.

dmk mps
dmk mps

By

Published : May 14, 2020, 10:46 AM IST

சென்னை தலைமைச் செயலகத்தில் திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் திமுக எம்பிக்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் தலைமைச் செயலர் சண்முகத்தை சந்தித்தனர். இந்த சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் நடைபெற்றது.

பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய டி.ஆர்.பாலு பரபரப்பு குற்றச்சாட்டு வைத்தார். அதில், "எதிர்க்கட்சித் தலைவர் அனுப்பி வைத்த திமுக பிரிதிநிதிகளுக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை. திமுகவின் ’ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் மூலம் மக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை தலைமைச் செயலரிடம் அளித்துள்ளோம்.

தலைமைச்செயலாளரை சந்திக்க வந்த திமுக எம்பிக்கள்

ஆனால், தலைமைச் செயலர் நாங்கள் சொன்னதை காது கொடுத்துக் கேட்கவில்லை. தாங்கள் கொடுத்த மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு தலைமைச் செயலரிடம் எந்தப் பதிலும் இல்லை. எங்களை அவமதித்துவிட்டார்" எனக் கூறினார்.

இதையும் படிங்க:கேரளாவில் 5 சிறுமிகளைக் கைதுசெய்யக்கோரிய சிறுவன்: காவலர்கள் அதிர்ச்சி!

ABOUT THE AUTHOR

...view details