சென்னை:அரசுப் பணிகளை தனியார் வசம் ஒப்படைக்கும் அரசாணை 115-ஐ ரத்து செய்யக்கோருவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தினர் மனு அளித்துள்ளனர்.
பின் செய்தியாளகளிடம் பேசிய அச்சங்கத்தின் தலைவர் வெங்கடேசன், 'அரசாணை 115-ஐ ரத்து செய்ய வேண்டும் என முன்வைத்த கோரிக்கைக்கு, முதலமைச்சர் ரத்து செய்வதாக உறுதி அளித்துள்ளதாகவும்; அதேபோல், அரசுப்பணியை தனியார் வசம் ஒப்படைக்கும் குழுவை கலைத்துவிட வேண்டும் எனவும், நிலுவையிலுள்ள அகவிலைப்படியை வழங்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளதாகவும்' கூறினார்.