தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அனைவரும் இன்புற்றிருக்க வேண்டும் - முதலமைச்சர் பக்ரீத் வாழ்த்து - bakrid wishes

ஈகை திருநாள் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில், இஸ்லாமியர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

chief Minster MK stalin
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

By

Published : Jul 21, 2021, 10:23 AM IST

Updated : Jul 21, 2021, 11:56 AM IST

ஈகை திருநாள் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில், ’தமிழ்நாட்டில் வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் தியாகப் பெருநாளான பக்ரீத் பெருநாள் நல்வாழ்த்துகளை இதயபூர்வமாகத் தெரிவித்துக்கொள்கிறேன். “அனைவரும் இன்புற்றிருக்க வேண்டும், அறநெறிகள் தவறாமல் வாழ்ந்திட வேண்டும்” என்ற உயரிய கோட்பாடுகள் இரண்டும் இஸ்லாமிய மக்களின் கண்ணின் மணிகளாக என்றும் இருந்து வருகின்றன.

பக்ரீத் வாழ்த்து

நபிகள் நாயகம் அளித்த போதனைகள், தங்கள் வாழ்க்கைப் பயணத்தில் கடைப்பிடிக்க வேண்டிய உன்னதமான நோக்கங்கள் என்பதை உணர்ந்துள்ள அவர்கள், அதன் வழி நின்று - அடி பிறழாமல் பின்பற்றி - இந்தப் பக்ரீத் பண்டிகையை ஆண்டுதோறும் கொண்டாடுகிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குரியது.

முதலமைச்சர் பக்ரீத் வாழ்த்து

“ஈட்டிய பொருளில் முதலில் ஏழைகளுக்கு - பிறகு நண்பர்களுக்கு - அடுத்துத்தான் தங்களுக்கு” என்ற கொள்கையின் அடிப்படையில் அனைவருக்கும் பகிர்ந்தளித்து - பயன்படுத்திக் கொள்ளும் பண்பையும் - மனித நேயத்தையும் இஸ்லாமியப் பெருமக்கள் வெளிப்படுத்தும் விதமாக, பக்ரீத் பண்டிகை நாளன்று ஏழை - எளிய மக்களுக்கு உதவிகளை வாரி வழங்குகிறார்கள்.

நபிகள் நாயகத்தின் போதனைகளுக்குச் சிறப்பும், பெருமையும் சேர்க்கும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரும் இந்தத் தியாகப் பெருநாளை மகிழ்ச்சியுடனும் கரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளைப் பின்பற்றியும் நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை முறையாக மேற்கொண்டும் கொண்டாடிட வேண்டும் என்று வேண்டி, பக்ரீத் பெருநாள் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்கிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பக்ரீத் பண்டிகை - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து

Last Updated : Jul 21, 2021, 11:56 AM IST

ABOUT THE AUTHOR

...view details