உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ், இந்தியாவிலும் தீவிரமாக பரவி வருகிறது. கரோனா தொற்று பரவலைத் தடுக்க மத்திய அரசு மே 3ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது.
இதனால் இன்றியமையா உற்பத்தி, தொடர் செயல்பாடுகளை கொண்டவற்றைத் தவிர பிற தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. மத்திய அரசு ஏப்ரல் 20 ஆம் தேதி சில தொழிற்சாலைகளுக்கு விலக்கு அளித்துள்ளது.
அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் சில தொழிற்சாலைகளை படிப்படியாக அனுமதிப்பது தொடர்பாகவும், நோய்த் தொற்று பரவாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பாகவும் முதலமைச்சர் இன்று 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் தொழிலதிபர்களுடன் சந்தித்து பேச உள்ளார்.
இதையும் படிங்க: முகக் கவசங்களை சுத்திகரிக்கும் கருவி - மதுரை இளைஞரின் வியக்க வைக்கும் கண்டுபிடிப்பு