தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’தமிழ்நாடு முன்னேற ஏழு இலக்குகள்’ - மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்திய முதலமைச்சர் ஸ்டாலின் - தமிழ்நாடு முன்னேற ஏழு இலக்குகள்

சென்னை: மாநிலம் முன்னேற அனைவருக்கும் உயர்தர கல்வி, உயர்தர மருத்துவம் உள்ளிட்ட ஏழு இலக்குகளை நிர்ணயித்து, அவற்றை அடுத்த பத்து ஆண்டுகளில் நிறைவேற்ற வேண்டுமென முதலமைச்சர் ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

cm
cm

By

Published : Jun 15, 2021, 8:41 PM IST

சென்னை தலைமை செயலகத்தில், இன்று (ஜூன். 15) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதியதாக பொறுப்பேற்கவுள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், ”கரோனா பெருந்தொற்றுப் பரவல் என்ற நெருக்கடியான காலக்கட்டத்தில், நோய்த் தொற்று பரவாமல் தடுத்திட மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளைப் பின்பற்றி, நோய்த் தொற்றுப் பரவல் எண்ணிக்கையை மேலும் குறைத்திட வேண்டும்.

அரசு சார்பாக மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை ஏராளமாக உருவாக்கி, படுக்கைகள் இல்லை என்ற புகாருக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என்ற நிலை மாறி உள்ளது. ஏராளமான தற்காலிக மருத்துவமனைகளை உருவாக்கி, ஆக்சிஜனை உள்நாட்டில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் பெற்றுத் தட்டுப்பாடு இல்லாமல் உபயோகிக்கும் நிலையும் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.

கல்வி, வேலைவாய்ப்பு, சமூகப் பொறுப்புகளில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க மாவட்டஆட்சியர்கள், தங்களது அதிகாரம், பதவியை பயன்படுத்தி தங்களது கடமைகளை சிறப்பாக ஆற்ற வேண்டும்.

வளரும் வாய்ப்புகள் - வளமான தமிழ்நாடு,

மகசூல் பெருக்கம் - மகிழும் விவசாயி,

குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர்,

அனைவருக்கும் உயர்தரக் கல்வி மற்றும் உயர்தர மருத்துவம்,

எழில்மிகு மாநகரங்களின் மாநிலம்,

உயர்தர ஊரகக் கட்டமைப்பு - உயர்ந்த வாழ்க்கைத் தரம்,

அனைவருக்கும் அனைத்துமான தமிழ்நாடு ஆகிய ஏழு இலக்குகளை பத்தாண்டு காலத்தில் நிறைவேற்றிட வேண்டும்.

பொதுவிநியோகத் திட்டத்தை முறையாகச் செயல்படுத்திட வேண்டும். பொதுவிநியோகத் திட்டத்தை முறையாகச் செயல்படுத்திட வேண்டும், அனைவருக்கும் குடும்ப அட்டைகள் கிடைத்திடவும், போலி அட்டைகளை ஒழித்திடவும், வழங்கப்படும் உணவுப் பொருள்கள் சுத்தமானதாக - தரமானதாக இருப்பதை உறுதி செய்திடவும் வேண்டும்.

மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும், நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளைக் கவனச்சிதறல்கள் இல்லாமல் நடைமுறைப்படுத்திடவும் அறிவுறுத்தி, அரசின் இலக்குகளைத் தங்களது இலக்குகளாகக் கொள்ள வேண்டும். நகர்ப்புற வளர்ச்சியும் ஊரக வளர்ச்சியும்தான் நாட்டின் வளர்ச்சிக்கான அடையாளங்கள்.

காலிப் பணியிடங்களை தகுதியானவர்களைக் கொண்டு நிரப்பிடவும், மாநில அரசும் ஒன்றிய அரசும் ஒதுக்கும் நிதியை முறையாகச் செலவு செய்து திட்டங்களை நிறைவேற்றிடவும் வேண்டும். மாநில அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஆகியவர்களோடு மாவட்ட ஆட்சியர்கள் இணைந்து பணியாற்றி, சிறப்பான ஆட்சியை மக்களுக்கு அளித்து, அரசுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

தனது அரசு உத்தரவு போடும் அரசு மட்டுமல்ல, மாவட்ட ஆட்சியர்கள் தெரிவிக்கும் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் காது கொடுத்துக் கேட்கும் அரசு. நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றி வளம் மிகுந்த தமிழ்நாட்டை உருவாக்குவோம்” எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details