தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளா? ஸ்டாலின் இன்று ஆலோசனை

தமிழ்நாட்டில் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளை அளிப்பது குறித்து சுகாதாரத் துறை அமைச்சர், அலுவலர்களுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜூன் 19) ஆலோசனை நடத்துகிறார்.

மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை!
மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை!

By

Published : Jun 19, 2021, 8:11 AM IST

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்கில் படிப்படியாகத் தளர்வுகள் அளிக்கப்பட்டுவருகின்றன. தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு, வரும் 21ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

முதலமைச்சர் ஆலோசனை

அதில், கரோனா பரவல் அதிகமுள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் குறைந்த அளவிலான தளர்வுகளும், மற்ற 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளன. இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள், வரும் திங்கள்கிழமை முடிவடைகிறது.

இந்நிலையில் 21ஆம் தேதிக்குப் பின்னர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகச் சுகாதாரத் துறை அமைச்சர், அலுவலர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

எதிர்பார்க்கப்படும் தளர்வுகள்

இதில், ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி, பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. சிறிய அளவிலான ஜவுளிக்கடைகள், நகைக் கடைகள்9

, சிறிய வழிபாட்டுத் தலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க:கல்வித் தொலைக்காட்சியில் இன்றுமுதல் வகுப்புகள் தொடக்கம்

ABOUT THE AUTHOR

...view details