தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள திமுகவினர் தயாராக வேண்டும் - முதலமைச்சர்

நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை எதிர்கொள்ள திமுகவினர் அனைவரும் தயாராக வேண்டும் என அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள திமுகவினர் அனைவரும் தயாராக வேண்டும் - ஸ்டாலின் பேச்சு
பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள திமுகவினர் அனைவரும் தயாராக வேண்டும் - ஸ்டாலின் பேச்சு

By

Published : Dec 28, 2022, 9:53 PM IST

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவின் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று நடைபெற்றது. இதில் திமுகவில் இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி என மொத்தம் 23 அணிகள் பங்கேற்றனர்.

அனைத்து அணிகளுக்கும் சமீபத்தில் புதிதாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சரும் மு.க.ஸ்டாலின், "மாவட்ட அளவில் திமுக அணிகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்கும் பணிகளை மாவட்ட செயலாளர்களுடன் கலந்து பேசி விரைந்து முடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

23 அணிகளின் செயல்பாட்டை கண்காணிக்க துணைப் பொதுச்செயலாளர்களாக ஐ.பெரியசாமி, பொன்முடி, கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும் அனைத்து அணிகளும் ஒன்றிணைந்து கட்சி வளர்ச்சிக்காக பாடுபட வேண்டும். திமுக ஆட்சியின் சாதனைகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் பணியில் அணிகளின் செயல்பாடுகள் அமைய வேண்டும். 2024 பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் கைப்பற்ற உங்களது பணி அடித்தளமாக அமையும் என்று கூறினார்.

அதிமுக, பாஜக கட்சியினரின் பொய் பிரசாரங்களை முறியடிக்கும் வகையில் நமது பிரசாரம் அமைய வேண்டும். அதிமுக எந்த வகையில் கூட்டணி அமைத்தாலும் மக்களிடம் அது எடுபடாது. அவர்களின் திட்டங்களை முறியடிக்கும் வகையில் நமது ஆட்சியின் செயல்பாடுகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க நீங்கள் பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்கு இப்போதே நீங்கள் தயாராக வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிக்காக பாரதிய ஜனதா கட்சி எதையும் செய்யத் தயங்காது. பாரதிய ஜனதா கட்சியை எதிர்கொள்ள திமுகவினர் அனைவரும் தயாராக வேண்டும் என்று தெரிவித்தார்.

இதுவரை நடைபெற்ற நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் திமுக தொடர்ந்து வெற்றி பெற்று வந்ததை போல் 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுக 40 இடங்களிலும் வெற்றி பெற நீங்கள் கடுமையாக பாடுபட வேண்டும். அதற்கேற்ப உங்கள் செயல்பாடு அமைய வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: 'தமிழ்நாட்டில் பாஜகவின் கொள்கைகள் ஊடுருவ முடியாது' - வைகோ

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details