சென்னை:வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் பரவலாக கனமழை பெய்துவருகிறது. இந்த நிலையில் வரும் மூன்று நாள்கள் மழை தீவிரமாக இருக்கும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த மழைக் காரணமாக சென்னையில் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுவந்தார். மக்களை நேரில் சந்தித்து நிவாரணப் பொருள்களை வழங்கினார். இதையடுத்து அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.